Tuesday, January 24, 2012

படிதத்தது - சிந்திக்க வைத்தது - தமிழவன்


ஒற்றை மொழி, பன்மொழிக் கலாச்சாரம் - தமிழவன்

ஒரு அருமையான கட்டுரை. உயிர்மை.காம் உயிரோசை வார தொகுப்பு மின் இதழில் வந்துள்ளது. கட்டாயம் படித்து சிந்திக்க வேண்டிய வேலை கொடுத்து விட்டார்!

//இரட்டைநிலை வேஷதாரித்தனம் அல்ல; அதுதான் உண்மை - தமிழவன்


என்போன்ற ஒருவன் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை ஒற்றைமொழிக் கலாச்சாரத்தின் மையத்தில் கழித்தவனல்ல. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிறமொழிக் கலாச்சார மனிதர்கள், இலக்கியவாதிகள், அவர்களின் நடை உடை பாவனைகள், விருந்துகள், விழாக்கள் என்று பரிச்சயம் கொண்டவன்.

ஒற்றை மொழிக் கலாச்சாரத்தின் மையத்திற்கென்றே உள்ள உறுதிகள் இல்லாதவன்; அதன் லாபங்களைப் பெறாதவன். பன்மொழிக் கலாச்சாரங்களுக்கான உறுதியின்மை, 'என் கருத்தைப் போல் இன்னொரு கருத்தினனுக்குக்கூட ஒரு நியாயம் இருக்கலாம்' என்ற எண்ணம் கொண்டவன்.

இத்தகைய குணநலன்களை ஒற்றைமொழிக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள், வேலை பார்த்தவர்கள், பெரும்பாலும் மதிப்பதில்லை.

தமிழ்ச் சமூகம் எத்தகைய ஒற்றைமொழிக் கலாச்சாரம் என்று யோசித்துப் பார்க்க வேண்டுமென்று படுகின்றது. முப்பதாம் வயதுக்குள்ளேயே தமிழகத்தைவிட்டு வெளியே வாழ வந்துவிட்டவன் என்ற நிலையில் எப்போதும் தமிழகத்தை இன்னொரு பார்வை வழியாகவே பார்த்து வந்திருக்கிறேன். '//





மேலே படிக்க இங்கே http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=688