Wednesday, January 06, 2010

காலச்சுவடு இம்மாத இதழ்- மறுபடியும்

மறுபடியும் எழுதாமல் இருக்க முடியவில்லை-

''கட்டுரை: நான் பார்க்காத முதல் குடியரசுதின விழா!
பாரதி மணி
இந்தத் தலைமுறை இளைஞர்கள் எத்தனை பேருக்கு Beating the Retreat என்பதன் பொருள் தெரியும்? போன வருடம் ஜனவரி 29ஆம் தேதி மாலை இந்த நிகழ்ச்சியைத் தில்லி தூர்தர்ஷனில் பார்த்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு இளைஞன் என்னைப் பார்க்க வந்தான். அவனுக்கு இதைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.''

இந்த கட்டுரை என்னை நெகிழ வைத்தது. Beating the Retreat பார்ப்பது ஒரு சுகமான அனுபவம் !

பாரதி மணி அவர்களுக்கு நன்றி.

ஒரு விதத்தில் 'பள்ளிகள் சிறைகளா? - பெருமாள்முருகன் ' அவர்களின் கட்டுரை எழுப்பும் கேள்விகள் , இந்த தலைமுறை பல விக்ஷயங்களில் அசட்டையாக இருப்பதற்கு காரணம்!

காலச்சுவடு இம்மாத இதழ்

//பத்தி: பள்ளிகள் சிறைகளா?
பெருமாள்முருகன்
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவரை உருவாக்குவதுதான் இந்தக் கல்விமுறையின் நோக்கம். எந்தக் கேள்வியும் கேட்காமல் வேலை பார்க்கும் ஆட்களைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கிச் சாதாரணக் கடைகள்வரை விரும்புகிறார்கள்.//

காலச்சுவடு இம்மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை . கோர்வையாக , ஆணித்தரமாக உள்ளது. பல பெற்றோர்களின் கேள்விகளும் இதுதான்.

யார் கவனிப்பார்கள்? கபில் சிபல்?